தமன்னா நடிப்பில் உருவான பெட்ரோமாக்ஸ் படம் வரும் 11ம் திகதி வெளிவர உள்ளது. விஷால் ஜோடியாக ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படத்திலும் நடித்துள்ளார்.
தமன்னாவிற்கு விரைவில் திருமணம் எனவும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தான் மாப்பிள்ளை என்றும் செய்தி பரவி வருகிறது.
இது குறித்து தமன்னா கூறுகையில், நடிப்பிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை. ஆனால் சிலர் தேவையில்லாத வதந்திகளை கிளப்புகிறார்கள். என்னை பற்றி வரும் திருமண செய்தி வெறும் வதந்தி தான்' என்றார்.