Home » கேளிக்கை » பெரிய படங்கள் ஓடுவதில்லை - சினேகன்

பெரிய படங்கள் ஓடுவதில்லை - சினேகன்

‘காந்தியம்’ என்ற தலைப்பே ஈர்க்கிறது.

👤 Sivasankaran3 Oct 2019 4:16 PM GMT
பெரிய படங்கள் ஓடுவதில்லை - சினேகன்
Share Post

காந்தியம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சினேகன் பேசுகையில், "இந்த நிகழ்ச்சிக்கு நான் வர முக்கிய காரணம் பாடலாசிரியர் காளிமுத்து. நான் பல காவல்துறை அதிகாரிகளை பார்த்திருக்கிறேன், அவர்கள் தமிழ் பற்று அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள், எப்படி தான் அவர்களால் அப்படி இருக்க முடிகிறது என்று கூட நான் யோசித்திருக்கிறேன். ஒரு பக்கம் காவல் பணி, மறுபக்கம் தமிழை காக்கும் பணி என்று பேலன்ஸ் செய்வார்கள். அவர்களைப்போன்ற ஒரு காவல்துறை அதிகாரி தான் காளிமுத்து. அவர் எழுதிய கவிதை புத்தகங்களை நான் வெளியிட்டிருக்கிறேன். தற்போது அவர் பாடலாசிரியாக அறிமுகமாகியிருக்கும் படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

'காந்தியம்' என்ற தலைப்பே ஈர்க்கிறது. அகிம்சை என்ற ஒன்றை உலகிற்கு கற்றுக்கொடுத்த காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ல் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது சிறப்பானதாகும்.

இப்போதெல்லாம் சிறிய படங்கள் தான் வெற்றி பெறுகிறது. பெரிய படங்கள் ஓடுவதில்லை. அதனால் சிறிய படங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில் இந்த 'காந்தியம்' நிச்சயம் வெற்றி பெறும்" என்று பேசினார்.