Home » கேளிக்கை » பிகில் - படம் தீபாவளிக்கு வெளிவருவது உறுதி

பிகில் - படம் தீபாவளிக்கு வெளிவருவது உறுதி

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் பிகில் படம் தீபவாளிக்கு வெளிவருவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம்...

👤 Sivasankaran11 Oct 2019 4:30 PM GMT
பிகில் - படம் தீபாவளிக்கு வெளிவருவது உறுதி
Share Post

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் பிகில் படம் தீபவாளிக்கு வெளிவருவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். நயன்தாரா பிசியோதெரபிஸ்ட்டாக நடித்துள்ளார். படம் மிகப்பெரிய செலவில், பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் இந்த படத்திற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.