Home » கேளிக்கை » நெஞ்சம் மறப்பதில்லை - படம் ரிலீசுக்கு தயார்

நெஞ்சம் மறப்பதில்லை - படம் ரிலீசுக்கு தயார்

திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.

👤 Sivasankaran14 Dec 2019 2:20 PM GMT
நெஞ்சம் மறப்பதில்லை - படம் ரிலீசுக்கு தயார்
Share Post

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் உருவாகி இருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.

2017ம் ஆண்டே படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தொடர்ந்து பலமுறை தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இப்போது படம் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.