Home » கேளிக்கை » தர்பார் கேபிள் டிவியில் வெளியானது - படக்குழுவினர் அதிர்ச்சி

தர்பார் கேபிள் டிவியில் வெளியானது - படக்குழுவினர் அதிர்ச்சி

இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

👤 Sivasankaran13 Jan 2020 4:37 PM GMT
தர்பார் கேபிள் டிவியில் வெளியானது - படக்குழுவினர் அதிர்ச்சி
Share Post

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தர்பார்'. இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 9-ம் தேதி இந்த படம் வெளியானது. இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில், மதுரையில் உள்ள ஒரு தனியார் கேபிள் டிவி சேனலில் 'தர்பார்' திரைப்படத்தை ஒளிபரப்பி இருப்பதை அறிந்த ரஜினி மக்கள் மன்றத்தினர், இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். 'தர்பார்' திரைப்படம் வெளியாகி 4 நாட்களே ஆன நிலையில் கேபிள் டிவியில் படத்தை ஒளிபரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் படக்குழுவினரை பெரியளவில் அதிர்ச்சிடைய வைத்துள்ளது.