தமிழ் படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து கலக்கியவர் சோனா. ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் ஆடி உள்ளார். சொந்தமாக வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்தார். அதில் போதிய வருமானம் இல்லை.
சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், "என்னை பார்த்து பலரும் படங்களில் நடிக்கவில்லையா என்று கேட்கிறார்கள். நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன்" என்று சோனா கூறினார்.
பச்சமாங்கா திரைப்படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால் தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப் படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.