மதத்தை வைத்து அரசியல் செய்வதை கண்டிக்கத்தக்கது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த் டெல்லி வன்முறையை அடக்க முடியாவிட்டால் மத்திய அரசு பதவியை விட்டு போய் விட வேண்டும் என்று கடுமையாக கூறியுள்ளார்.
மத்திய உளவுத்துறையின் தோல்வியே கலவரத்திற்குக் காரணம் என்று கூறிய ரஜினி காந்த், மத்திய அரசு சிஏஏ சட்டத்தை திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றார். வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் கூறினார், சிஏஏவுக்கு எதிராக போராடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் ரஜினி தெரிவித்தார்.