அஜித்குமார் வலிமை படத்தில் தற்போது நடித்து வருகிறார். அஜித் சமூகவலைதளங்களில் இணைவதாக அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த அறிக்கையை பார்த்து அஜித் ரசிகர்கள் பலரும் உண்மை என நம்பி மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் இதுகுறித்து அஜித் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் கூறி எந்த கடிதத்தையும் வெளியிடவில்லை என்று அஜித்குமார் தெரிவித்துள்ளார்.