Home » கேளிக்கை » நடித்து முடித்தவுடன் நான் ரஜினி அல்ல, சிவாஜி ராவ் - ரஜினி பேச்சு

நடித்து முடித்தவுடன் நான் ரஜினி அல்ல, சிவாஜி ராவ் - ரஜினி பேச்சு

தன் வாழ்க்கை குறித்துப் பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

👤 Sivasankaran21 March 2020 11:26 AM GMT
நடித்து முடித்தவுடன் நான் ரஜினி அல்ல, சிவாஜி ராவ் - ரஜினி பேச்சு
Share Post

'இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்' என்கிற டிஸ்கவரி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் நடிகா் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளா் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினாா்.

சமீபத்தில் வெளியான நிகழ்ச்சியின் 2-வது டீசரில் தன் வாழ்க்கை குறித்துப் பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

நடித்து முடித்தவுடன் அந்த வேலை முடிந்தது. பிறகு ரஜினி காந்தை மறந்துவிடுவேன். சிவாஜி ராவுக்குத் திரும்பிவிடுவேன். அது எனக்கு தொழில் மட்டுமே. யாராவது என்னை நீங்கள் ரஜினிகாந்த் என்று சொல்லும்போது தான் ஆமாம், நான் ரஜினி தான் என நினைப்பேன் என்று கூறியுள்ளார்.