சிபிராஜ் தனது மகனுக்கு தீரன் சின்னமலை என்று பெயர் வைத்துள்ளாராம்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து எழுதியுள்ள பதிவில், ''இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன்!'' என்று குறிப்பிட்டுள்ளார்.