Home » கேளிக்கை » கொரோனா வைரஸ் நமக்கு உணர்த்திய பாடம் - காஜல் அகர்வால்

கொரோனா வைரஸ் நமக்கு உணர்த்திய பாடம் - காஜல் அகர்வால்

பணத்தை விட மன அமைதி முக்கியம் என்பது எல்லோருக்குமே புரிந்து இருக்கும்

👤 Sivasankaran18 April 2020 2:59 PM GMT
கொரோனா வைரஸ் நமக்கு உணர்த்திய பாடம் - காஜல் அகர்வால்
Share Post

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். கொரோன வைரஸ் பல விஷயங்களை நமக்கு புரிய வைத்திருக்கிறது என்றார்.

எனது சின்ன வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களை பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு மன அமைதியை தவிர முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்துள்ளது. எந்த மாதிரியான நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக இருக்கத்தான் நான் விரும்புகிறேன். எவ்வளவு பணம் இருந்தாலும் அமைதி இல்லாமல் போனால் என்ன பயன். இப்போது கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் பணத்தை விட மன அமைதி முக்கியம் என்பது எல்லோருக்குமே புரிந்து இருக்கும் என்றார் காஜல் அகர்வால்.