Home » கேளிக்கை » நடிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது - திரிஷா

நடிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது - திரிஷா

இது எல்லாம் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நான் நேரம் போக்கும் முறை.

👤 Sivasankaran24 April 2020 3:37 PM GMT
நடிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது - திரிஷா
Share Post

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் சென்று விடுவார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருப்பது போர் அடிப்பதாக சொல்கிறார் திரிஷா.

"நான் சுதந்திர பறவை. எப்போதும் வீட்டில் நான் இருந்தது கிடையாது. தோழிகளுடன் அரட்டை அடிப்பதில் பிசியாக இருப்பேன். அவர்களுடன் ஊர் சுற்றுவேன். இது எல்லாம் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நான் நேரம் போக்கும் முறை.

வீட்டிலேயே இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. தோழிகளுடன் வீடியோ காலில் பேசிவிடுகின்றேன். படப்பிடிப்புக்கு சென்று நடிக்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது என்று கூறினார்.