Home » கேளிக்கை » இந்தச் சூழலை கடந்துதான் வந்தாகணும் - இனியா

இந்தச் சூழலை கடந்துதான் வந்தாகணும் - இனியா

இந்த ஊரடங்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை. நிறைய பேருக்கு இது ரொம்ப ரொம்ப சவாலான சூழல்.

👤 Sivasankaran11 May 2020 3:27 PM GMT
இந்தச் சூழலை கடந்துதான் வந்தாகணும் - இனியா
Share Post

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் அதிகளவில் பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.

ஊரடங்கு குறித்து நடிகை இனியா அளித்த பேட்டியில், ``என் வீடு திருவனந்தபுரத்துல இருக்கு. ஒரு நிகழ்ச்சிக்காக கொச்சின் வந்திருந்தேன். அப்பதான் ஒருநாள் ஊரடங்கு அறிவித்தார்கள். அதுக்குப் பிறகு, என்னால திருவனந்தபுரத்துக்கும் போக முடியாமல் சென்னைக்கும் வர முடியாமல் கொச்சின்ல மாட்டிக்கிட்டேன். அக்கா வீட்ல இருக்கேன். இந்த ஊரடங்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை. நிறைய பேருக்கு இது ரொம்ப ரொம்ப சவாலான சூழல்.

நம்ம இயற்கைக்கு என்ன செய்றோமோ அதைத்தான் இயற்கை நமக்கு திருப்பிக்கொடுக்கும். அப்படி நம்ம அனுபவிக்கிற காலம் இது. அதனால இந்தப் பாடத்தை நம்ம ஏத்துக்கிட்டு இந்தச் சூழலை கடந்துதான் வந்தாகணும" என்று கூறினார்.