Home » கேளிக்கை » வாழ்த்து அருவியில் நனைய வைத்த அனைவருக்கும் நன்றி - இளையராஜா

"வாழ்த்து அருவியில் நனைய வைத்த அனைவருக்கும் நன்றி" - இளையராஜா

விருதுகள் சிலரை கவுரவிக்கும், சிலரால் விருதுகள் கவுரவம் பெறும் அந்த வகையில் விருதை சிறப்பு பெறவைத்திருப்பவர் இசை ஞாணி, மேஸ்ட்ரோ, நகரத்தின் வாடையே தெரியாத பண்ணைப்புரத்தில் இருந்து வந்து இசைப்பாராளும் இளையராஜா

👤 Saravana Rajendran10 Feb 2018 12:30 AM GMT
வாழ்த்து அருவியில் நனைய வைத்த அனைவருக்கும் நன்றி - இளையராஜா
Share Post

2018-ஆம் ஆண்டு பதமவிருது அறிவிப்பில் இளையராஜாவின் பெயரும் வந்தது. 2010-ஆம் ஆண்டு இளையராஜாவிற்கு பத்மபூசன் விருது அளிக்கப்பட்டது. இம்முறை பதமவிபூசன் இப்புரியாத பூசன் விபூசன்களுக்கு இளையராஜ கையில் சேர்ந்த பிறகுதான் பெருமை கிடைக்கிறது.

அவரின் பெயர் அறிவிக்கப்பட்டதும்,
பல திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இசைப்பிரியர்கள் உலகத்தமிழர்கள் என அனைவரும் இளையராஜாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது, அனைவரின் வாழ்த்து குறித்து இளையராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "எனக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, இன்று வரை, என்னை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த, உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில்துறையினர், ஊடகத்துறையினர் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.
விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வாழ்த்தும், உங்களின் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தை தந்துள்ளது. என்னை நெகிழ வைத்துள்ளது. ஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும்... மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டு இருப்பேன். அன்பெனும் மழையில் நனைய வைத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனப்பூர்வமான நன்றி" என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.