Home » கேளிக்கை » சாட்சிகள் சுவர்க்கத்தில்- ஈழத்தின் அவலங்களைக் கூறும் திரைப்படம் இசை வெளியீட்டுவிழா

சாட்சிகள் சுவர்க்கத்தில்- ஈழத்தின் அவலங்களைக் கூறும் திரைப்படம் இசை வெளியீட்டுவிழா

ஈழத்தில் நடந்த பல மனித உரிமை மீறல்நிகழ்வுகளையும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு சாட்சிகள் சுவர்க்கத்தில் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளில் இப்படம் ஈழத்தை மையமாக வைத்து நடந்த பல குறும்படங்களை தழுவி எடுக்கப்பட்டது.

👤 Saravana Rajendran13 Feb 2018 6:56 AM GMT
Share Post

இத்திரைப்படம், 2009ல் இலங்கை அரச படையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கும், பாடகியும் உடகவியளாளரும், நடிகையுமான சகோதரி இசைப்ரியாவுக்கும் மனப்பூர்வமாக சமர்பிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி, அவர்களின் இழப்பை கருவாக கொண்டு உருவான கதைதான் 'சாட்சிகள் சொர்க்கத்தில்' படமாகும்.

பாலச்சந்திரனின் வேடத்தில் இயக்குநர் ஈழன் இளங்கோவின் மகன் சத்யா இளங்கோ நடித்துள்ளார். ஈழத்தில் நடந்த கற்பழிப்பு கட்சிகளோ, கொலை கட்சிகளோ துன்புறுத்தல் கட்சிகளோ இத்திரைப்படத்தில் இடம்பெறவில்லை. அதைவிட ஆழமான உணர்வுகளையும் வலியையும் அடக்கியுள்ளது இத்திரைப்படம்.
ஆஸ்திரேலியாவிலும், பிரான்ஸ் நாட்டிலும் படமாக்கப்பட்ட இப்படத்தின் தொழில்நுட்ப வேலைப்பாடுகள் தமிழ் நாட்டு திரைக் கலைஞர்களால் செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு சென்னையில் பிரபலமான சதிஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார். சதீஷ் வர்ஷனின் குரலில் இரு பாடல்களும், தேசிய விருது பெற்ற பிரபல பாடகி சுர்முகியின் குரலின் ஒரு பாடலும் அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தில், ஆஸ்திரேலிய தமிழ், ஆங்கில நடிகர்களுடன் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழ் நடிகர்களும், அவர்களோடு ஐம்பது வருட திரையுலக அனுபவமுள்ள ஈழத்து பிரபல நடிகர் ஏ ரகுநாதன் நடித்துள்ளார்.