Home » கேளிக்கை » இது எதிர்ப்பல்ல காதலர் நாள் கொண்டாட்டத்தின் ஒரு நிறம்- வாட்டாள் நாகராஜ்!

இது எதிர்ப்பல்ல காதலர் நாள் கொண்டாட்டத்தின் ஒரு நிறம்- வாட்டாள் நாகராஜ்!

காதலர் தினத்தை விடுமுறை நாளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆட்டு ஜோடிக்கு திருமணம் செய்து தனது ஆதரவை மாறுபட்ட செயலால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

👤 Saravana Rajendran14 Feb 2018 2:28 PM GMT
இது எதிர்ப்பல்ல  காதலர் நாள் கொண்டாட்டத்தின் ஒரு நிறம்- வாட்டாள் நாகராஜ்!
Share Post

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தையொட்டி காதல் சார்ந்த விஷயங்கள், எதிர்ப்பு விஷயங்கள் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் 6 முறை எம்.எல்.ஏ பதவி வகித்தவரான வாட்டாள் நாகராஜ் காதலர் தினத்தை ஒட்டி இரண்டு ஆடுகளுக்கு திருமணம் செய்து வைத்து அன்பை வெளிபடுத்தி உள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு மாநில அரசு ரூபாய் 50,000 முதல் 1 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், காதலர் தினத்தை விடுமுறை நாளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இவர், கர்நாடகா, கன்னட மொழி இரண்டுக்காகவும் பல ஆண்டுகளாகக் குரல் கொடுப்பதாகச் சொல்லிக்கொள்ளும் வாட்டாள் நாகராஜ். கர்நாடகா சலுவாலி வட்டாள் பக்‌ஷா என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.
வாட்டாள் நாகராஜன் என்றாலே தமிழர்களுக்கு தமிழர் விரோதி என்ற ஒரு நினைவு தான் வரும் "2017-ஆம் ஆண்டு தீபாவளி அன்று அவரை பெங்களூருவில் உள்ள மட்வாலா என்ற இடத்தில் சந்தித்த போது, " நான் எந்த மொழிக்கும் இனத்திற்கு எதிரானவன் அல்ல, எனது சுற்றத்தார் அனைவரும் தமிழர்கள் தான், நான் கன்னட மொழிக்கும், கன்னடர்களுக்கு ஆதரவானவன். எனது மொழி எனது இனம் எனக்கு மேலானது இந்தப்பார்வை சிலருக்கு நான் எதிரியாக தெரிகிறேன். நான் மராட்டியம் சென்றோ தமிழகம் சென்றோ கன்னடமொழி கன்னட மக்களுக்காக ஆதரவாக நான் பேசினால் நிச்சயம் எதிர்ப்பார்கள். ஆனால் எனது மண்ணில் இருந்து நான் பேசுவது எனக்கான உரிமைதானே என்று கூறினார்.
பகுத்தறிவு வாதியாக வாட்டாள் நாகராஜன் மத அமைப்புகள் திருவிழாக் காலங்களில் கடைகளில் வசூல் செய்வதை கடுமையாக எதிர்ப்பவர் ஆவார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மதவிழாவிற்கு பெங்களூருவின் கடைவீதிகளில் அடாவடி வசூலில் இறங்கிய மத அமைப்பைச்சேர்ந்தவர்களை உள்ளாடையுடன் சாலையில் ஓடவிட்டார். இது தொடர்பாக இந்து அமைப்புகள் இவர் மீது வழக்கு தொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.