தனது பயணத்தின் முன்பு அரசியல் அமைப்பு பற்றி படித்துவருகிறார். அதில் உள்ள சில சந்தேகங்களை தெரிந்து கொள்ள டி.என்.சேஷனை சந்தித்தர். அரசியல் கட்சிகளி மூத்த தலைவர்களைச் சந்தித்து கமல் ஆலோசனை நடத்திவருகிறார். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, வரும் 21-ம் தேதி சுற்றுப் பயணத்துக்கான விவரத்தை வெளியிட்டுள்ளார்.
காலை 7.45 மணி : அப்துல் கலாமின் இல்லத்துக்கு வருகிறார்.
காலை 8.15 மணி : அப்துல் கலாம் படித்த பள்ளிக்குச் செல்கிறார்.
காலை 8.50 மணி : கணேஷ் மஹாலில் மீனவர்களைச் சந்திக்க இருக்கிறார்
காலை 11.10 மணி : அப்துல் கலாமின் நினைவிடத்துக்குச் செல்கிறார்.
காலை 11.20 மணி : நினைவில்லத்தில் இருந்து மதுரைக்குப் புறப்படுகிறார்.
நண்பகல் 12.30 மணி : ராமநாதபுரம் அரண்மனை நுழைவுவாயிலில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.
பிற்பகல் 2.30 மணி : பரமக்குடி ஐந்துமுனை சாலையில் லேனா மஹாலின் முன் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
பிறபகல் 3.00 மணி : மானாமதுரை ஶ்ரீபிரியா தியேட்டருக்கு அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.
மாலை 5 மணி : மதுரை ஒத்தைக்கடை மைதானத்துக்கு வருகிறார்.
மாலை 6 மணி : தான் அறிவிக்கவிருக்கும் அரசியல் கட்சியின் கொடியை ஏற்றுகிறார்.
மாலை 6.30 மணி : பொதுக்கூட்டம் தொடங்குகிறது.
இரவு 8.10 முதல் 9 மணி வரை : தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி உரையாற்றுகிறார்.
இரவு சென்னை புறப்படுகிறார். அடுத்த நடவடிக்கை குறித்து சென்னையில் ஊடகவியாளர்களைச் சந்தித்து தெரியப்படுத்துவார் என்று தெரிகிறது,
ரஜினி 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் கட்சி பற்றி அறிவித்துவிட்டு அவ்வப்போது அவர் சார்பாக சில அறிக்கைகளை விட்டுவிட்டு அமைதியாகிவிடுகிறார். அவருக்கு தமிழகத்தில் மட்டும் தான் சிஸ்தம் சரியில்லை, நீரவ் மோடி என்ற பண முதலையை விமானம் நிலையம் வரை சென்று வழியனுப்பி தப்பவைத்த மத்திய அரசின் ஹார்ட்வேட் நன்றாக இருக்கிறது என்று நினைத்து ஊர்ந்துகொண்டு இருக்கும் போது கமலகாசன் பொதுக்கூட்டம் வரை முன்னேறிவிட்டார்.
90 களில் ரஜினி படத்திற்கும் கமலகாசன் படத்திற்கும் போட்டி உண்டு, தற்போது அரசியல் படத்திலும் இருவர் போட்டி உண்டு எப்படியோ தமிழக மக்களுக்கு இருவருமே நல்ல பொழுது போக்கை அரசியலும் தருகிறார்கள் வேடிக்கை பார்ப்போம்