Home » கேளிக்கை » துவங்கியது கமலின் அரசியல் பயணம்- ஒரு நேரடிப் பார்வை

துவங்கியது கமலின் அரசியல் பயணம்- ஒரு நேரடிப் பார்வை

தமிழக அரசியலில் கமல் தனது பயணத்தை துவங்கியிருக்கிறார். இன்று அதிகாலை ராமேஸ்வரம் சென்ற கமலகாசன் மீனவர்களைச் சந்தித்து உரையாடினார். மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்து நான் உங்களுடன் இருப்பேன் என்று கூறினார். இந்த மீனவர் சந்திப்பிற்கு நம்மவர் மீனவர்கள் சந்திப்பு என்று பெயர்சூட்டியுள்ளார்.

👤 Saravana Rajendran21 Feb 2018 4:16 AM GMT
துவங்கியது கமலின் அரசியல் பயணம்- ஒரு நேரடிப் பார்வை
Share Post

அதிகாலையில் கலாம் இல்லத்துக்குச் சென்ற நடிகர் கமலகாசன், கலாம் அண்ணன் மற்றும் பேரன்களைச் சந்தித்துப் பேசிவிட்டு, தற்போது கலாம் இல்லத்திலிருந்து வெளியேறினார். தொடர்ந்து, கலாம் பயின்ற பள்ளிக்குச் செல்வதாகத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஆனால், கல்வித்துறை அதற்குத் தடை விதித்திருப்பதையடுத்து, அந்தப் பயணத்தை ரத்துசெய்திருக்கிறார் கமல்ஹாசன்.
கலாம் இல்லத்திற்கு சென்ற பிறகு அவர் தன்னுடைய டுவீட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது, "பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்." என கருத்து தெரிவித்தார்.
நடிகர் கமலகாசன்.மீனவர்கள் சந்திப்பை முடித்துக்கெண்ட கமல் அடுத்து அப்துல் கலாம் நினைவிடம் செல்கிறார், அங்கு அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்து மதுரை நோக்கி புறப்படுகிறார். மதுரை செல்லும் வழியில், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
தொடர்ந்து, மதுரையில் இரவு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கமலகாசன், தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திப் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் பங்கேற்கிறார்.
கமல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, காலை 11 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னை வருகிறார், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜரிவால். இன்று மாலை சென்னையிலிருந்து மதுரை செல்லும் அவர், இரவு மதுரையில் நடக்கும் கமலாகசனின் அரசியல் பிரவேசப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
பள்ளிக்குத் தடை
அப்துல் கலாம் படித்த பள்ளிக்குள் கமல் செல்ல தடை விதிக்கப்பட்டதையடுத்து, கலாம் பயின்ற பள்ளி முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி முன்பு தடுப்பு வைத்துத் தடுக்கப்பட்டுள்ளது. கமலகாசன், கலாம் வீட்டிலிருந்து பள்ளி வழியாகச் செல்ல உள்ள நிலையில், அவர் பள்ளிக்குள் செல்ல முயலக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. பள்ளிக்குள் செல்ல கமலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.15 மணிக்கு, கலாம் பயின்ற பள்ளிக்கு சென்று மாணவர்கள் மத்தியில் அவர் உரையாட திட்டமிட்டிருந்தது. மாணவர்களிடம் கமல் அரசியல் பேச எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி புகார் அளித்ததால் அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாட கல்வித்துறை தடை விதித்தது. இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.