திருட்டு வீசிடிக்கள் தயாரிக்கும் கும்பல் மற்றும் புதிய படங்களை சட்டத்திற்கு புறம்பாக இணையதளங்களில் வெளியிடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் உள்ளிட்ட ஏராளமான இணையதளங்கள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய தமிழ்திரைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்த 28 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக திரைப்படங்கள் வெளியான சில மணிநேரங்களில் tamilrockers,tamilmvfun போன்ற இணையதளங்கள் அப்படங்களை தங்களின் இணையதளத்தில் வெளியிட்டுவிடுகின்றன. இதனை முடக்க பல்வேறு நடவ்வடிக்கைகள் எடுத்தும் முடியாத காரணத்தால் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு புகார்களை அளித்ததை அடுத்து காவல்துறை இணையதள குற்றப்பிரிவு காவல்துறை இந்த இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.