நான் பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்ல விடாமல் சில தடைகள் இருக்கின்றன. மாணவர்களிடையே பேசி, இன்றைய நிலை குறித்து நான் புரிய வைத்து விடுவேனோ என்ற பதற்றம் பலருக்கு இருக்கிறது. அதற்கு நான் இப்படி பதில் சொன்னேன். நான் கல்லூரிக்குச் செல்வதை நீங்கள் தடை செய்யலாம். ஆனால், நான் கற்பதை நீங்கள் தடை செய்ய முடியாது.
மாணவர்கள் படித்து முடித்து வெளியே வரும் போது உங்களை தாக்கப்போவது, அரசியலும் ஊழலும் தான். அதை எதிர்கொள்ள உங்களுக்கு அரசியல் புரிந்திருக்க வேண்டும். உங்களுக்குப் புரிந்துவிட்டால், அரசியலுக்கும் வரும் அரசியல்வாதிகள் நியாயமாக இருப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் இருப்பவர்களுக்கு இல்லை. சோறு எங்கு இருந்து வருகிறது என்பதைப் பார்த்து, விவசாயிகளை மதிக்க வேண்டும். திராவிடத்தை ஒழிக்க முடியாது. அது ஒரு இனத்தைக் குறிக்கும் . திராவிடம் நாடு தழுவியது" என்றார்.