Home » கேளிக்கை » ஆர்யா காதல்வலையில் வீழ்ந்து விட்டாரா?

ஆர்யா காதல்வலையில் வீழ்ந்து விட்டாரா?

ஆர்யா 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அறிந்தும் அறியாமலும்’ என்னும் படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

👤 Sivasankaran7 Jan 2019 7:48 AM GMT
ஆர்யா காதல்வலையில் வீழ்ந்து விட்டாரா?
Share Post

ஆர்யா 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த 'அறிந்தும் அறியாமலும்' என்னும் படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஆர்யாவிற்கு 38 வயது ஆகி விட்டது. சென்ற வருடம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்னும் நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். இறுதி போட்டிக்கு 3 பெண்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், யாரையும் திருமணம் செய்யாமல் விலகி விட்டார். ஒருவரை மணந்தால் மற்ற இருபெண்கள் மனது புண்படும் என்றும் காரணம் சொன்னார். பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

ஆர்யா - சாயிஷா இருவரும் காதலிக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

ஆர்யா - சாயிஷா இருவரும் தற்போது சூர்யாவுடன் "காப்பான்" என்னும் படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடப்பதால், இருவரும் அங்கு காதலை வளர்த்ததாகவும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது. ஆனால், இந்த தகவல் உண்மைதானா என்பதை இருவரும் உறுதிப்படுத்தி செய்தி எதுவும் வெளியிடவில்லை.