
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரிய கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தை திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் தமிழர்களால் உற்சாக கொண்டாடப்படுகிறது. நாட்டில் உழவர்களுக்கு நன்றி செலுத்தக்கூடிய நாளாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
சினிமா நட்சத்திரங்களான பலரும் தங்களுடைய ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி வருகின்றனர்.
ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் குவிந்த ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார். இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மன நிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்.