Home » கேளிக்கை » காயமடைந்தாலும் படப்பிடிப்பை நிறுத்தாத ஹன்சிகா

காயமடைந்தாலும் படப்பிடிப்பை நிறுத்தாத ஹன்சிகா

ஹன்சிகா தற்போது ‘மஹா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

👤 Sivasankaran23 Jan 2019 5:56 PM GMT
காயமடைந்தாலும் படப்பிடிப்பை நிறுத்தாத ஹன்சிகா
Share Post

ஹன்சிகா தற்போது 'மஹா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை யூஆர் ஜமீல் இயக்கி வருகிறார். எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் இடம் பெறும் ஒரு சண்டைக்காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. ஹன்சிகா தரையில் குட்டிக் கரணம் அடிக்க வேண்டும். ஒரு சிறு கால இடைவெளியில் அது தவறாக அமைந்து, காயத்தில் முடிந்தது.

விரைவான முதல் உதவி மற்றும் குழுவின் ஆதரவு ஹன்சிகாவை அந்த சம்பவத்தில் இருந்து மிக விரைவில் மீட்டது. திரும்ப திரும்ப சொல்லப்பட்ட ஆலோசனைக்கு பின்னரும் கூட, ஹன்சிகா எந்தவொரு கையசைவும் இன்றி அந்த காட்சியில் நடித்தார்.