
மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்து வருபவர் மஞ்சு வாரியர். தனுஷின் `அசுரன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் இயக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த படத்துக்கான கதாநாயகியாக பலரை பரிசீலித்து தற்போது மஞ்சு வாரியரை படக்குழு தேர்வு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த கருத்தை குறிப்பிட்டு, மஞ்சு வாரியர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
`இது தான் எனது முதல் தமிழ் திரைப்படம். இதைவிட ஒருவருக்கு வேறு என்ன வேண்டும். தனுஷ், வெற்றிமாறனுக்கு நன்றி. நானும் உற்சாகமாக உள்ளேன்' என்று மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.