
பிரபல இந்தி நடிகை வித்யா பாலன் சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான 'த டர்டி பிக்சர்' படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
வித்யா பாலன் ஒரு படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ.6 கோடி...
2012-ல் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார்.
தெலுங்கில் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதை படத்தில் அவரது மனைவி பசவதாரகம் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.
தற்போது அஜித் ஜோடியாக இந்தி 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் நடிப்பதன் மூலம் தமிழுக்கும் வந்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.