Home » கேளிக்கை » சசிகுமார் ஜோடியாக நடிக்கிறார் நிக்கி கல்ராணி

சசிகுமார் ஜோடியாக நடிக்கிறார் நிக்கி கல்ராணி

சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக `நாடோடிகள் 2' ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. பிப்ரவரியில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

👤 Sivasankaran6 Feb 2019 4:28 PM GMT
சசிகுமார் ஜோடியாக நடிக்கிறார் நிக்கி கல்ராணி
Share Post

சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக `நாடோடிகள் 2' ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. பிப்ரவரியில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சசிகுமார் தற்போது, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் `கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சசிகுமாரின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை சுந்தர்.சி.-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கதிர் இயக்குகிறார்.

சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்., இசையமைக்க, சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.