Home » கேளிக்கை » ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் திருமணம்

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் திருமணம்

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும் பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளர் விசாகனுக்கும் நாளைய தினம் (10-ம்...

👤 Sivasankaran9 Feb 2019 5:39 PM GMT
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் திருமணம்
Share Post

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும் பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளர் விசாகனுக்கும் நாளைய தினம் (10-ம் திகதி) ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் திருமணம் நடக்க உள்ளது.

திருமண நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நேற்று ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ரஜினியுடன் நட்புடன் இருக்கும் நல்லி குப்புசாமி, கண்ணதாசன் மகன் குடும்பம், ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள் என சினிமா சாராத நபர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

பொதுவாக, திருமணத்துக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பது தான் வழக்கம். சிலர் மரக்கன்றுகளைக் கொடுக்கின்றனர். ரஜினி வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தினார்.