Home » கேளிக்கை » நயன்தாராவின் ஐரா படம் எப்போது வெளியீடு?

நயன்தாராவின் ஐரா படம் எப்போது வெளியீடு?

நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.

👤 Sivasankaran18 Feb 2019 4:06 PM GMT
நயன்தாராவின் ஐரா படம் எப்போது வெளியீடு?
Share Post

நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'ஐரா'. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தை மார்ச் மாதம் 28ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.