Home » கேளிக்கை » புத்தாண்டில் டாப்சி எடுத்த தீர்மானம்

புத்தாண்டில் டாப்சி எடுத்த தீர்மானம்

பெரிதாக ஹிட் படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் ஹீரோயினாக அறிமுகம் கிடைத்தது இங்கு தான் என்று கூறியிருக்கிறார்.

👤 Sivasankaran1 March 2019 4:37 PM GMT
புத்தாண்டில் டாப்சி எடுத்த தீர்மானம்
Share Post

டாப்சி தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.டாப்சி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்த பட்லா திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவே அதிக விருப்பம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "தமிழ் படங்களின் மூலம்தான் நான் சினிமாவில் அறிமுகமானேன். பெரிதாக ஹிட் படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் ஹீரோயினாக அறிமுகம் கிடைத்தது இங்கு தான் என்று கூறியிருக்கிறார்.

எவ்வளவு பாலிவுட் படங்களில் நடித்தாலும் தமிழ், தெலுங்கு சினிமாவை விட்டுவிட மாட்டேன். என் திரையுலக வாழ்க்கை தொடங்கியது இங்கே தான். எனவே தென்னிந்தியா சினிமாக்களில் நடிப்பேன். ஆண்டுக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று இந்த புத்தாண்டில் தீர்மானம் எடுத்துள்ளேன் என்றார் டாப்சி.