
நகைச்சுவையில் கலக்கிய வைகைப் புயல் வடிவேலு 24ம் புலிகேசி திரைப்படத்தில் நடிக்க துவங்கி, அந்தப்படத்தில் இருந்து பாதியில் விலகினார். பின்னர் அது பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த படத்தின் இயக்குநர் ஷங்கர் வடிவேலுவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். வடிவேலுக்கு ரெட்கார்டும் இதனால் போடப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு நடிக்கும் அடுத்த படத்தில் பெயர் தற்போது வெளிவந்துள்ளது. அந்த படத்தின் பெயர் "பேய்மாமா". வடிவேலுவின் ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இந்த படம் வடிவேலுக்கு எப்படி அமையப்போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.