Home » கேளிக்கை » பிரபல நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்

நடிகர் நாகேஷுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வழிகாட்டியாக இருந்தவர் இவர்தான்.

👤 Sivasankaran6 March 2019 2:48 PM GMT
பிரபல நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்
Share Post

மூன்று தலைமுறை நடிகர்கள் படங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு இன்று காலமானார். இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், விஜய், அஜித் என 3 தலைமுறை நடிகர்ளுடன் நடித்தவர்.

'அதே கண்கள்', 'ருத்ரா' படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு வயது 85. சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த இவர், இன்று மாலை 4.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

எழுத்தாளர் சோ மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரின் நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் கோபு. இவரது நடிப்புத் திறமை காரணமாகப் பிரபலமானவர். முதன்முதலில் நடிகர் நாகேஷுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வழிகாட்டியாக இருந்தவர் இவர்தான். நாகேஷுடன் நெருங்கிய நட்பு பாராட்டிவந்தார். வயது மூப்பின் காரணமாக சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வந்தவர். 700-க்கும் அதிகமான திரைப்படங்களிலும், ஏராளமான நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.