Home » கேளிக்கை » திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி

திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி

இந்த தோற்றத்தில் நடிப்பதற்கு தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், எளிதாக நடித்து விடலாம் என்று நினைத்திருந்த தனக்கு பிறகு தான் அதன் கஷ்டங்கள் புரிந்ததாகவும் கூறினார்.

👤 Sivasankaran7 March 2019 2:27 PM GMT
திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி
Share Post

விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான நடிப்பால் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தவர். சீதக்காதியில் வயதான தோற்றத்தில் வந்த அவர் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தார்.

தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியின் திருநங்கை வேடத்துக்கு வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த தோற்றத்தில் நடிப்பதற்கு தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், எளிதாக நடித்து விடலாம் என்று நினைத்திருந்த தனக்கு பிறகு தான் அதன் கஷ்டங்கள் புரிந்ததாகவும் கூறினார். திருநங்கைகளும் மனிதர்கள் தான். அவர்களை பிரித்து வைக்க கூடாது. அவர்களை மதித்து நடத்த வேண்டும் என்றும் விஜய் சேதுபதி கூறினார்.