Home » கேளிக்கை » சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படம்

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படம்

நடிப்பினால் குழந்தைகளின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து விட்டார் என்றும் கூறலாம்.

👤 Sivasankaran8 March 2019 2:58 PM GMT
சிவகார்த்திகேயன்  நடிக்க இருக்கும் அடுத்த படம்
Share Post

சிவகார்த்திகேயனின் படங்கள் வெற்றி படங்களாக அமைந்து விடுகிறது. தனது நடிப்பால் குழந்தைகளின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து விட்டார் என்றும் கூறலாம்.

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். மெரினா படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ்.

இவர்களது கூட்டணியில் உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவகார்த்திகேயனின் 16-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.