Home » கேளிக்கை » ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் ஐதராபாத்தில் இன்று திருமணம்

ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் ஐதராபாத்தில் இன்று திருமணம்

கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் சாயிஷா நடித்து வந்தார். இருவருக்கும் காதல் மலர்ந்தது.

👤 Sivasankaran10 March 2019 3:45 PM GMT
ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் ஐதராபாத்தில் இன்று திருமணம்
Share Post

ஆர்யா பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு வயது 38.

கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் திருமணத்திற்காக மணப்பெண் தேடி வந்தார். ஆனால் அதில் எதுவும் சரிவர கிடைக்கவில்லை.

கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் சாயிஷா நடித்து வந்தார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினம் அன்று சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக டுவிட்டரில் பதிவிட்டார் ஆர்யா.

இன்று காலை ஐதராபாத்தில் ஆர்யா - சாயிஷா திருமணம் நடைபெற்றது. இதில் பல நடிகர்-நடிகைகள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.