Home » கேளிக்கை » நிஜக் கத்தியுடன் பயிற்சி செய்கிறார் வரலட்சுமி

நிஜக் கத்தியுடன் பயிற்சி செய்கிறார் வரலட்சுமி

பெண்கள் சண்டையிட முடியாது என்று யார் சொன்னது?

👤 Sivasankaran11 March 2019 4:19 PM GMT
நிஜக் கத்தியுடன் பயிற்சி செய்கிறார் வரலட்சுமி
Share Post

வரலட்சுமியின் தற்போது வெல்வட் நகரம், கன்னி ராசி, நீயா 2, காட்டேரி, டேனி, கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராஜ பார்வை படத்திலும் நடித்து வருகிறார். ஜே.கே இயக்கும் இந்தப் படத்தில் கத்தியை லாவகமாகச் சுற்றும் காட்சி இடம்பெறுகிறது. அதற்காக நிஜக் கத்தியை அவர் பிடிப்பதை வீடியோ பதிவாக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

"பெண்கள் சண்டையிட முடியாது என்று யார் சொன்னது? நிஜக் கத்தியுடன் ராஜ பார்வை படத்திற்காக பயிற்சி செய்கிறேன். பயிற்சியே முழுமையைத் தரும் அப்போது மிகுந்த மகிழ்ச்சியைப் பெறலாம். இதை படம் பிடித்த சிகை அலங்கார கலைஞர் ஸ்ரீதருக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் வரலட்சுமி பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.