Home » கேளிக்கை » மனைவி சாயிஷாவை புகழ்ந்த ஆர்யா

மனைவி சாயிஷாவை புகழ்ந்த ஆர்யா

வெகுகாலமாக என் பெற்றோர் என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி வந்தனர்.

👤 Sivasankaran15 March 2019 4:19 PM GMT
மனைவி சாயிஷாவை புகழ்ந்த ஆர்யா
Share Post

கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக சாயி‌ஷா நடித்த போது இருவருக்குள் காதல் மலர்ந்து அது திருமணம் என்ற பந்தத்தில் முடிந்தது.

ஆர்யா, சாயிஷா திருமணம் கடந்த 10-ம் திகதி ஐதராபாத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு பல சினிமா நட்சத்திரங்களும், கிரிக்கெட் பிரபலங்களும், நண்பர்களும் வந்திருந்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஆர்யா-சாயிஷாவின் திருமண வரவேற்பு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.

ஆர்யாவிடம் சாயிஷாவை திருமணம் செய்து கொண்டது பற்றி கேட்ட போது,

'சாயிஷாவை மனைவியாக பெற்றதில் மகிழ்ச்சி. கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே சின்ன ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் நண்பர்களாக மாறினோம். காப்பான் படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கியபோது எங்களுக்குள் இருந்த நட்பை பார்த்து, இருவரது பெற்றோரும் நிச்சயித்து திருமண ஏற்பாடுகள் செய்தார்கள்.

வெகுகாலமாக என் பெற்றோர் என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி வந்தனர். அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றியதிலும் அவர்களுக்கு பிடித்த பெண்ணையே மனைவியாக அமைந்ததிலும் எனக்கு மகிழ்ச்சி என்று கூறினார்.