Home » கேளிக்கை » மீண்டும் நடிக்க வருகிறார் சங்கீதா

மீண்டும் நடிக்க வருகிறார் சங்கீதா

எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக அமையாததால் எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.

👤 Sivasankaran16 March 2019 3:13 PM GMT
மீண்டும் நடிக்க வருகிறார் சங்கீதா
Share Post

விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்', `காக்கி' படங்களில் நடித்து வருகிறார். தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்க, விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சங்கீதா ஒப்பந்தமாகி இருக்கிறார். சுமார் இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த சங்கீதாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து சங்கீதா கூறும்போது,

எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக அமையாததால் எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் பேசப்படும், மருத்துவமனை ஒன்றை நடத்தும் டாக்டர் வேடத்தில் நடிக்கிறேன். இதில் எனது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறினார்.