Home » கேளிக்கை » புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த சோனாலி பிந்த்ரே

புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த சோனாலி பிந்த்ரே

புற்றுநோயை தன்னம்பிக்கையுடன் எதிர்த்து நின்ற நடிகை.

👤 Sivasankaran18 March 2019 4:27 PM GMT
புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த சோனாலி பிந்த்ரே
Share Post

'காதலர் தினம்' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். புற்றுநோயின் பாதிப்பால் அவர் வெளிநாட்டில் சிகிச்சைப் பெற்று தற்போது குணமாகி மீண்டு வந்து இருக்கிறார். அந்த அனுபவங்களை மனம் திறந்து வெளியிட்டார்.

புற்றுநோயை மறைக்க விரும்பாமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். ஆரோக்கியத்தை உருவாக்கும் எத்தனையோ பொருட்களுக்கு தூதுவராக இருந்த எனக்கு புற்றுநோய் என்ற தெரிந்ததும், எனது வாழ்க்கை தலைகீழாக ஆனது. எல்லோரும் தைரியம் கொடுத்தனர். இதனால் நோயை எதிர்கொள்ள தன்னம்பிக்கை வந்தது.

அறுவை சிகிச்சைக்கு பிறகும் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது உடலில் 20 இடங்களில் ஆபரேஷன் செய்த வடுக்கள் உள்ளன. நான் மறுபடியும் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் கடவுள் காப்பாற்றி அனுப்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

கடவுள் எதற்காக என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார் என்ற காரணத்தை கண்டுபிடிப்பேன். எத்தனையோ எண்ணைக்கு விளம்பரம் செய்த நான் எனது தலைமுடியையும் இழந்து விட்டேன். பழைய முடி எனக்கு இல்லை என்ற உணர்வு வருகிறது. ஆனாலும் எனது புருவங்கள் மறுபடியும் வளர்ந்து விட்டது என்று சோனாலி பிந்த்ரே கூறினார்.