Home » கேளிக்கை » திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பிரபல இயக்குநர் மகேந்திரன் (வயது 79) சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை...

👤 Sivasankaran2 April 2019 2:31 AM GMT
திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்
Share Post

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பிரபல இயக்குநர் மகேந்திரன் (வயது 79) சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று [மார்ச், 02] காலை காலமானார்.

மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியினை தெரிவித்துள்ளார்.

மகேந்திரன் இயக்கிய படங்களில் உதிரிப்பூக்கள் படம் மிக சிறந்த ஒன்றாகும். முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை கொடுக்கும் கை போன்ற படங்களை ரஜினிகாந்தை வைத்து இயக்கியவர்.

இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.