Home » கேளிக்கை » விஜய் சேதுபதி மீது திருநங்கைகள் புகார்

விஜய் சேதுபதி மீது திருநங்கைகள் புகார்

படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் வந்தாலும், விஜய் சேதுபதியின் திருநங்கை நடிப்பை பலரும் பாராட்டினர்.

👤 Sivasankaran3 April 2019 3:39 PM GMT
விஜய் சேதுபதி மீது திருநங்கைகள் புகார்
Share Post

விஜய் சேதுபதி திருநங்கையாக சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் வந்தாலும், விஜய் சேதுபதியின் திருநங்கை நடிப்பை பலரும் பாராட்டினர்.

ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், விஜய் சேதுபதி பேசும் வசனம் உள்ளது. இதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதியை கண்டித்தும் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த படம் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது என்றும் திருநங்கைகள் கூறியுள்ளனர்.