Home » கேளிக்கை » தயாரிப்பாளராக தடம் பதிக்கிறார் அமலபால்

தயாரிப்பாளராக தடம் பதிக்கிறார் அமலபால்

அமலா பாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

👤 Sivasankaran4 April 2019 2:53 PM GMT
தயாரிப்பாளராக தடம் பதிக்கிறார் அமலபால்
Share Post

முன்னணி கதாநாயகியான அமலா பால் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். ராட்சசன் படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல, ஆடை போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது அமலா பாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் உமா டத்தனால் எழுதப்பட்ட 'ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தின் இயக்குனர் அனூப் பணிக்கர். `கடாவர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் அமலா பால், தடய நோயியல் நிபுணராக நடிக்கிறார். அதுல்யா, ஹரிஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் மூலம் அமலா பால் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுக்கிறார். இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து படங்களை தயாரிப்பது பற்றி முடிவு செய்வேன் என்று அமலா பால் கூறியுள்ளார்.