Home » கேளிக்கை » இயக்குநர் நிஹலானி மீது புகார் கொடுத்த கங்கனா ரணாவத்

இயக்குநர் நிஹலானி மீது புகார் கொடுத்த கங்கனா ரணாவத்

புகாரை மறுத்திருக்கிறார் இயக்குநர் நிஹலானி.

👤 Sivasankaran5 April 2019 4:56 PM GMT
இயக்குநர் நிஹலானி மீது புகார் கொடுத்த கங்கனா ரணாவத்
Share Post

'தாம் தூம்' படத்தில் நடித்த கங்கனா ரனாவத் தற்போது இந்தி படங்களில் முழு கவனம் செலுத்தி நடித்து வருகிறார். 2 முறை தேசிய விருதுகள் பெற்று பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தற்போது தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார்.

கங்கனா ராணவத் பாலிவுட் பிரபல இயக்குநர் பஹலாஜ் நிஹலானி மீது புகார் கூறியிருக்கிறார். 'ஐ லவ் யூ பாஸ்' என்ற இந்தி படத்தில் நடித்தபோது, உள்ளாடை அணியாமல் கயிறுகள் மட்டுமே கட்டிக்கொண்டு தன்னை போட்டோவுக்கு போஸ் கொடுக்க, இயக்குநர் நிஹலானி வற்புறுத்தியதாகவும், அது ஒரு வகையான ஆபாச படம் என்றும் தெரிவித்துள்ளார். 'ஐ லவ் யூ பாஸ்' படத்தில், நடுத்தர வயதுடைய அலுவலக மேலதிகாரி ஒருவருடன் உடலுறவு கொள்ளும் கதாபாத்திரம் தரப்பட்டது. அதில் நான் நடிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இவர் கூறிய புகாரை மறுத்திருக்கிறார் இயக்குநர் நிஹலானி.