Home » கேளிக்கை » ரகுல் பிரீத் சிங் படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு

ரகுல் பிரீத் சிங் படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு

படம் முடிந்து திரைக்கு வரும் நிலையில் உள்ளது.

👤 Sivasankaran6 April 2019 1:48 PM GMT
ரகுல் பிரீத் சிங் படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு
Share Post

சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் இந்தியில் நடித்திருக்கும் படத்தில் மீடூ புகாரில் சிக்கிய நடிகர் அலோக் நாத் நடித்திருப்பதால் ரசிகர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த படம் முடிந்து திரைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால் அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், ரகுல் பிரீத் சிங்கால் எந்த பிரச்சினையும் இல்லை. படம் வெளிவருமா?