தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரெஜினா. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரியின் மகன் சாய் தரம் தேஜ் ஹீரோவாக அறிமுகமான பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் ரெஜினா ஜோடியாக நடித்தார். அதில் இருந்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது.
இது பற்றி ரெஜினா அளித்துள்ள பதில்....
கடந்த சில நாட்களாக எனக்கும், சக நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அதில் உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவை ஆதாரமற்ற வதந்தி.
என் வாழ்வில் தற்போது உள்ள ஒரே காதல் என் வேலை தான். அதை தவிர வேறு எந்த காதலும் இல்லை. நான் காதலித்தால் நானே உங்களிடம் தெரிவிப்பேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி' என்று கூறி உள்ளார்.