போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை' என்ற படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் பிரபலமான கல்கி கோச்லின் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் மூலமாக கல்கி கோச்லின் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். வருகிற ஆகஸ்ட் 10-ம் திகதி ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.