தூத்துக்குடி படத்தில் நடித்து "கருவாப்பையா கருவாப்பையா" என்ற பாடல் மூலம் ரசிகர்களின் மனதினை கொள்ளைக் கொண்டவர் கார்த்திகா.
நாளைய பொழுதும் உன்னோடு, பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரை சம்பவம், வைதேகி போன்ற படங்களில் நடித்தார். பின் மும்பை சென்று விட்டார்.
மீண்டும் சென்னை வந்தவர் ரசிகர்கள் தன்னை மறக்கவில்லை என்பதை தெரிந்துக் கொண்டார். மீண்டும் படங்களில் நடிக்க தயாராகிவிட்டார். தொலைக்காட்சிகளில் நடிக்க வாய்ப்பு வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டார். திரைப்படங்களின் மட்டுமே நடிப்பேன் என்ற தீவிர முயற்சியில் இருக்கிறார் கார்த்திகா.