Home » கேளிக்கை » மீண்டும் நடிக்க வருகிறார் மாளவிகா

மீண்டும் நடிக்க வருகிறார் மாளவிகா

மாளவிகாவிற்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.

👤 Sivasankaran12 April 2019 4:28 PM GMT
மீண்டும் நடிக்க வருகிறார் மாளவிகா
Share Post

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்... பாடலில் நடனம் ஆடி பிரபலமானார் மாளவிகா. திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி, ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

10 வருடத்திற்கு முன்னர் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார். மாளவிகாவிற்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். மீண்டும் நடிப்பதற்கு 2 கதைகள் கேட்டுள்ளார்.

தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். ரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள். வாளமீன் பாடல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன்.

மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. எனவே நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன் என்றார்.