இளைஞர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பின்னர் தற்போது 'சிந்துபாத்' என்னும் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை மே 16ம் திகதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.