Home » கேளிக்கை » வயதான தோற்றத்தில் ரசிகர்களை அசத்தும் டாப்சி

வயதான தோற்றத்தில் ரசிகர்களை அசத்தும் டாப்சி

பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் டாப்சி. தற்போது துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும்...

👤 Sivasankaran18 April 2019 3:42 PM GMT
வயதான தோற்றத்தில் ரசிகர்களை அசத்தும் டாப்சி
Share Post

பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் டாப்சி. தற்போது துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் சாந்த் கி ஆங்க் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் அறுபது வயது பெண் தோற்றத்தில் நடிக்கிறார்.

தற்போது டாப்சியின் கதாபாத்திரத்தை விளக்கும் வகையிலான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரகாஷி, சந்திரோ ஆகிய இரு துப்பாக்கி சுடும் வீராங்கனைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாகியுள்ளது. இந்தியாவின் வறண்டக் கிராமம் ஒன்றின் பின்னணியில் கதை நடைபெறுகிறது.

இந்த படத்திற்காக டாப்சி துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக்கொண்டார். டாப்சியின் தோற்றத்திற்காக ஹாலிவுட் படங்களுக்கு ஒப்பனை செய்யும் கலைஞர்கள் ஒப்பனை செய்துள்ளார்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடுவோம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.