Home » கேளிக்கை » திரிஷாவின் அடுத்த படம் பற்றிய தகவல்கள்

திரிஷாவின் அடுத்த படம் பற்றிய தகவல்கள்

தமிழில் ராங்கி என்றால் அடங்காத பெண் என்று பொருள்.

👤 Sivasankaran19 April 2019 3:18 PM GMT
திரிஷாவின் அடுத்த படம் பற்றிய தகவல்கள்
Share Post

இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது.

தமிழில் ராங்கி என்றால் அடங்காத பெண் என்று பொருள். அந்த வகையில், தைரியமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் திரிஷா வருவார் என்று தெரிகிறது.

சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.